மரக் கிளையை வெட்டிய இளைஞன் கீழே விழுந்து பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரக்கிளையுடன் கீழே விழுந்த நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான காணியை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு செய்ய சென்ற வேளை புளிய மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டிருந்த போது குறித்த கிளையுடன் கீழே விழுந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரக் கிளையை வெட்டிய இளைஞன் கீழே விழுந்து பலி - Lanka News - Tamilwin News

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கு அமைவாக மண்டூர் திடீர் மரண விசாரனை அதிகாரி த.தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிசாரிற்கு உத்தரவிட்டுள்ளார்

மரக் கிளையை வெட்டிய இளைஞன் கீழே விழுந்து பலி - Lanka News - Tamilwin News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here