மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன?

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மெதடிஸ் மிசன் தமிழ் மகா வித்தியாலயத்தினால் நடாத்தப்படும் வருடாந்த இல்ல மெய்வல்லூனர் விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டம் இன்று காலை இடம்பெற்றது.

இவ் மரதன் ஓட்டத்தில் 6ஆம் இடத்தினை தன்வசமாக்கி கொண்ட 16வயது மாணவன் மயங்கி விழுந்த நிலையில் திருக்கோவில் வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியை மறித்து திருக்கோவில் ஆதாரவைத்திய சாலைக்கு முன்பாக பாரிய போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேலும் குறித்த போராட்டத்தில் வைத்தியசாலை நிருவாகத்தினர் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் வைத்தியசாலை மீது கல்வீச்சி தாக்குதலை மேற்கொண்டனர்.

பின்னர் போராட்ட களத்திற்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

பின்னர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய RDHS மற்றும் பிரதேச செயலாளர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வலையக்கல்வி பணிப்பாளர் பாடசாலை அதிபர் பொதுமக்கள் மாணவர்கள், பொலிஸ்சார்,விசேட அதிரடி படை ஆகியோரின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் பொதுக்களினால் வைத்தியசாலை பற்றிய பல கோரிக்கைகள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் முன்வைக்கப்பட்டது.

பின்னர் சுகாதர சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாங்க விரைவில் குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை, பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் இது போன்று பல சம்பவங்கள் எமது பிரதேசத்தில் நிகழ்த்துள்ளது.

மேலும் குறித்த வைத்தியசாலை தம்பட்டை தொடர்க்கம் தாண்டியடி வரையான பகுதிகளுக்கு ஒரே ஒரு வைத்தியசாலை ஆகும் இப்படி தொடர்ச்சியாக இடம்பெற்றால் மக்களின் நிலை என்ன? இதற்கு சரியான தீர்வு எப்போது கிடைக்கும் என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News மரதனில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழப்பு!! பின்னர் நடந்தது என்ன? - Tamilwin News