மருத்துவபீட மாணவன் Mohamed Ayman சிகிச்சை பலனின்றி பலியான சோகம்

எங்கள் குடும்பத்தின் புன்னகை இளவரசன் Mohamed Ayman எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி சற்று முன் இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார் என Mohamed Ayman இன் தாயின் சகோதரர் Sabir Musthafa ( ஆசிரியர் ) தெரிவித்தார்.

பேராதனை பல்கலை இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவரான இவர் சில நாட்களுக்கு முன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் கல்முனை பழைய தபாலக வீதியைச் சேர்ந்தவர், பேராதனை பல்கலைகழக வைத்தியபீடத்தின் இறுதியாண்டு மாணவனும் முன்னாள் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் முஹமட் சேர் அவர்களின் அன்பு மகனும் அவார்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம், உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக!

ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மருத்துவபீட மாணவன் Mohamed Ayman சிகிச்சை பலனின்றி பலியான சோகம் - Lanka News - Tamilwin News மருத்துவபீட மாணவன் Mohamed Ayman சிகிச்சை பலனின்றி பலியான சோகம் - Lanka News - Tamilwin News மருத்துவபீட மாணவன் Mohamed Ayman சிகிச்சை பலனின்றி பலியான சோகம் - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here