மலசலகூட குழியில் விழுந்து இருவர் உயிரிழப்பு.

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் குழாய் அமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மலசலகூட குழியில் விழுந்துள்ளார்.

பின்னர் அவரை காப்பாற்ற மற்றைய நபரும் மலசலகூட குழியில் இறங்கிய வேளை, அவரும் மலசலகூட குழியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் மலசலகூட குழியில் விழுந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.