மாங்குளத்தில் வெடிப்பு சம்பவம் – இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு, மாங்குளத்தில் இன்று நடந்த வெடிப்புச் சம்பவத்தில் 6 வயதுச் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மாங்குளம், நீதிபுரத்தில் விறகு சேகரிக்கச் சென்றபோதே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

மாரிமுத்து மணியம் என்ற 84 வயது முதியவரும், பார்த்தீபன் நிதர்சன் என்ற 6 வயதுச் சிறுவனுமே படுகாயமடைந்துள்ளனர்.

மணியம் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நிதர்சன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்றபோது கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடித்திருக்கலாம் என்று சந்கேகிக்கப்படுகின்றது. ஆயினும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளபோதும், போர் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் ஆபத்து வலயங்களாகவே இருக்கின்றன.

போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருள்கள் தற்போதும் உயிராபத்துக்களையும், அவய இழப்புக்களையும் ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றன.

மேலும் அறிய  பெண்ணின் சடலம் மீட்பு.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here