மின்சார கம்பியில் தேர் மோதியதில் நேர்ந்த விபரீதம்!! 2 பேர் பலி; 3 பேர் காயம்

பசறை நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், பூடவத்தை நமுணுகுல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கணேசன் ரமேஷ், 27 வயதுடைய பன்னீர் செல்வகுமார் ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து பசறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தேஹேன கதிர்காமம் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று (23) மாலை தெய்வானையுடன் புறப்பட்ட தேர் பெரஹர கந்தேஹேன, தேவதுர, பூட்டாவத்த ஆகிய கிராமங்களின் ஊடாக பயணித்த வேளை பூட்டாவத்த பகுதியில் குறித்த தேர் அதிவேக மின்சாரத்தை கடத்தும் வடத்தில் மோதுண்டதினால் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் நமுனுகுல பொலிஸார் மேதலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here