HomeAccident Newsமுச்சக்கரவண்டி மீது ரயில் மோதி விபத்து!

முச்சக்கரவண்டி மீது ரயில் மோதி விபத்து!

இன்று (27) காலை வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.

பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ´காலு குமாரி´ கடுகதி ரயிலில் முச்சக்கரவண்டி மோதியதில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தல்பிட்டிய சமுர்த்தி வங்கிக்கு வருகை தந்த இருவரே காயமடைந்துள்ளனர்.

ரயில் கடவையில் முச்சக்கரவண்டி திடீரென நின்றுள்ளதுடன் உடனடியாக செயற்பட்ட சாரதி குறித்த இரண்டு பெண்களையும் வாகனத்தில் இருந்து வௌியேற்றியுள்ளார்.

இதனால் அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments