முன்னணியின் மற்றுமொரு திருகுதாளம் அம்பலம்! நடவடிக்கை எடுக்குமா கட்சித் தலைமை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பில் ஊடகங்களின் போலியான ஒலிவாங்கிகள் வைக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது பல ஊடகங்கள் சமூகமளிக்காத நிலையில் ஊடகங்களினுடைய போலியான ஊடக ஒலிவாங்கியை வைத்து ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் போலியான ஊடக ஒலிவாங்கிகளை குறித்த கட்சியினுடைய தீவிர செயற்பாட்டாளர் ஒருவரே வைத்து வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையினுடைய பிரபலமான ஊடகங்களான DAN TV, CAPITAL TV, HIRU NEWS, SURIYAN FM ஆகிய ஊடகங்களின் ஒலிவாங்கிகள் போன்று போலியான ஒலிவாங்கிகளை அவர்களே தயார் செய்து குறித்த ஊடக சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் அக்கட்சியினுடைய ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நடராஜா காண்டீபன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடகசந்திப்பில் வைக்கப்பட்டிருந்த ஊடக ஒலிவாங்கிகள் பார்க்கும்போதே போலியானவை என தெரிகின்ற போதும் குறித்த சட்டத்தரணி அதனை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார் என பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் போலியான ஊடக ஒலிவாங்கிகளை வைத்து ஊடக சந்திப்பை மேற்கொள்வதற்கு முயற்சித்த கட்சியின் செயற்பாட்டாளருக்கு எதிராக கட்சியினுடைய தலைவர் கஜேந்தகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போகின்றனர் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செயற்பட்டுவரும் நிலையில் இவ்வாறு போலியான ஊடக ஒலிவாங்கிகள் வைக்கப்பட்டமை ஊடகவியலாளர்களின் பணியினை கொச்சைப்படுத்தும் செயல் என பல ஊடகவியலாளர்களும் கவலைவெளியிட்டுள்ளனர்.

முன்னணியின் மற்றுமொரு திருகுதாளம் அம்பலம்! நடவடிக்கை எடுக்குமா கட்சித் தலைமை - Lanka News - Tamilwin News

இச்சம்பவம் தொடர்பாக ஈழநாடு பத்திரிகையில் வெளியான பதிவு இது

இப்படியும் நடக்கிறது

அவர் ஒரு கலைஞர். பிரபல அறிவிப்பாளர். மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கெட்டிக்காரர்.

அவர் திடீரென்று இன்னுமொரு கலைஞரை ஆசிரியராகக் கொண்டு பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க விருப்பதாக விளம்பரப்படுத்தியிருந்தார்.

அந்தக் கலைஞரும் முன்னர் பத்திரிகையாளராக இருந்ததை நான் அறியவில்லை.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

ஒரு கலைஞர் இன்னுமொரு கலைஞரை ஆசிரியராகக் கொண்டு பத்திரிகை தொடங்கவிருப்பதாக விளம்பரங்களை வெளியிட்ட போது ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

ஆசிரியராக பணியாற்றவிருந்த அந்தக் கலைஞரும் ஈழத்தில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான கலைஞர்தான்.

இப்போதெல்லாம் பத்திரிகை வெளியிடுவதெனில் கொம்பியூட்டரில் தமிழ் எழுதத் தெரிந்திருந்தால் போதுமானதுதானே. அதனையும்விட கொஞ்சம் கொம்பியூட்டர் அறிவும் இருந்தால் பிறகு என்ன? பத்திரிகையை வெளியிட்டுவிடலாம்தானே.

இந்த கலைஞர்களின் பத்திரிகை முயற்சி பற்றிய விளம்பரத்தை பார்த்த பின்னர் ஒருநாள் அவரை வீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்கொள்ள முடிந்தது.

என்னைக் கண்டதும் அவராகவே விசயத்தை சொன்னார். கைப்பையில் இருந்து பத்திரிகை பற்றிய துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தந்தவர், ‘கேள்விப்பட்டி ரூப்பியள்தானே… என்றவாறு தொடர்ந்தார்.

‘என்ன செய்வது நாங்கள் இத்தனை காலமாக கலைத்துறையில் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் உங்கள் பத்திரிகையில் எங்களைப்பற்றி கண்டுகொள் கிறீர்களே இல்லை. அதுதான் நாங்களாகவே பத்திரிகையைத் தொடங்கியாவது எங்களைப் பற்றி எழுதலாம் என்று முடி வெடுத்தோம்’ என்றார்,

இந்தச் சம்பவம்தான் அந்தச் செய்தியை அறிந்த போது ஞாபகத்துக்கு வந்தது.

ஓர் அரசியல் பிரமுகர் ஊடகங்களுக்கு முன்னால் பேசுகின்ற புகைப்படம் ஒன்றை பார்க்கமுடிந்தது. அந்த பிரமுகர் முன்னால் ஏராளமான ஊடகங்களின் மைந்குகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் என்ன சொன்னார் என்பதை அறிந்து அதனை ‘ஈழநாடு’வுக்கு செய்தி ஆக்குவதற்காக டான் செய்திப்பிரிவுடன் தொடர்புகொண்டு கேட்டேன்.

ஏனெனில் அவர் முன்னால் டான் ரீ, வி. மைக்கும் இருந்தது. அப்படி யெனில் டான் ரிவியின் செய்தியாளர் அங்கே போயிருக்கிறார் என்பதை தெரிந்ததால் அவர்களிடமிருந்து செய்தியைப் பெறமுயன்றோம்.

அந்த அரசியல்வாதியிடமிருந்து இதுவரை எந்த வொரு செய்தியும் கிடைக்கவில்லை என்றார்கள். கிடைத்ததும் தொடர்பு கொள்வதாக பொறுப்பாசிரியர் கூறியிருந்தார்.

ஆனால், அன்று முழுவதும் அவர் தொடர்பு கொள்ளவே இல்லை.

மறுநாள் அந்த அரசியல்வாதியின் செய்தியை யார் கவனித்தார்கள் என்பதை கேட்டு அறியுமாறு மீண்டும் கேட்டபோதுதான் விசயம் தெரியவந்தது.

அது அந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களே நாட்டிலுள்ள எல்லா ஊடகங்களின் வோகோக்களையும் தாங்களே பிறின்ற் பண்ணி, மைக்குகளைச் செய்து வைத்திருப்பதாகவும் நமது கட்சி ஊடகப் பொறுப்பாளர் பின்னர் அதனை ஊடகங்களுக்கு (அதுவும் தமக்கு வேண்டியவற்றுக்கு ) அனுப்புவதாகவும் தெரியவந்தது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

அப்படி எல்லா ஊடகங்களின் செய்தியாளர்களும் அதனை ‘கவர்’ பண்ணியிருந்தால் அந்த ஊடகங்களும் அந்தச் செய்தியை வெளியிடும் என்பதால் மற்றவர்களும் அதனை வெளியிடுவார்கள் என்ற ‘அரசியல்” அது.

அதாவது டான் ரி. வி. மைக் இருந்தாஸ் டான் ரீ.வி. அதனை வெளியிடும் அதனால் டான் ரி,விக்கு போட்டியான ஊடகங்களும் அதனை வெளியிடுவார்கள் அல்லவா?

அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் தாமே பிளாமிகளாக இருந்து ஊடகங்களை ஆரம்பிப்பது பற்றித்தான் அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது, அதற்காக அந்தக் கட்சியாலும் பத்திரிகைகளை ஆரம்பிக்க முடியாது என்பதல்ல. அவர்கள் காட்டில் கான் புலம்பெயர் மண்ணிலிருந்து நல்ல மழை பெய்துகொண்டிருக்கின்றதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here