முல்லைத்தீவில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் விபரீத முடிவு

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் தம்பிலுவில்லில் திருமணம் முடித்து வசித்து வந்த சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பொலிஸாரின் இறப்புக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்டாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here