முல்லைத்தீவில் பெரும் சோகம் – வைத்தியசாலையிலிருந்து திரும்பிய பெண் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு போலீஸ் பிரிவு உட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதி ஒன்றில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவில் வெளியே சென்ற பெண்
சம்பவத்தில் ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற இளம் குடும்பப் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 12 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் கண்டுபிடிக்க்காத நிலையில் , இன்று அதிகாலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புது குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.