முல்லையில் தொடரும் ஆசிரியர் துஸ்பிரயோகங்கள்!! மேலும் ஒருவர் மாட்டினார்

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் வாத்தி ஒருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில,

பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற வாத்தி ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையம் வைத்தும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தியும் கல்வி கற்று வந்துள்ளார்.

இவ்வாறு கல்வி கற்றுவரும் ஆண் மாணவர்களை தன் வலைக்குள் வீழ்த்தி ஓரின பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.

இது தொடர்பில் பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பிரதேச செயலத்தில் முறையிடப்பட்ட போதும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த தனியார் வாத்தியாரால் ஆறு ஆண் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த சம்பவம் இடம்பெற்று வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 13.11.23 அன்று குற்றஞ்சாட்டப்பட்ட வாத்தியாரால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தனியார் வாத்தி நெட்டாங்கண்டல் பொலீசாரால் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க மன்ற உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பிலான சட்டவைத்திய பரிசோதனை மற்றும் முதற்கட்ட விசாரணைகள் என்பன தற்போது இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை பாண்டியன் குளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய குற்றச்சாட்டில் கல்விசார் திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டு அயல் பாடசாலை ஒன்றிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் பரவலாக இடம்பெற்று வருகின்றமையும் பொலீசார் மற்றும் திணைக்களம் சார் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கதவறியமை பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here