முல்லையில் 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம்!! 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்!! நடந்தது என்ன?

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் குடும்பத்தாருடன் இணைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

15 வயதான சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

மேற்படி சிறுமி கடந்த 6 வருடங்களின் முன்னர்-அவருக்கு 9 வயதாக இருக்கும் பொழுது-அயல் வீட்டார் ஒருவரால் துஷ்பிரயோக்ததுக்கு உட்படுத்தப்பட்டார். இதை எடுத்து அவர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பபட்டார்.

6 வருடங்களின் பின்னர் இந்த வருடம் ஜனவரியில் வீட்டாருடன் சிறுமி இணைக்கப்பட்ட நிலையில் தற்போது சிறிய தந்தையால் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பிணியான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here