இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையினால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது, சிறுவனுக்கு கடந்த வருடத்தின் இறுதியில் குருதிப் புற்றுநோய் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது,
இந்நிலையில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கவுள்ளதாக கூறி சிறுவனை யாழ்.போதனா வைத்தியசாலையலிருந்து பெற்றோர் கூட்டி சென்றுள்ளனர்.
பின்னர் கோப்பாய் பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தினமும் வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் சிறுவனுக்கு வயிறு வீங்கி வந்துள்ளது. இதனால் உணவு வழங்குவதை குறைத்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களாக மூச்சுவிட சிரமப்பட்டு உயிரிழந்துள்ளான்.
முட்டாள்தனமான மத நம்பிக்கையினால் சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படாமையே உயிரிழப்புக்கு காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.