மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு கிடைத்துள்ள பெறுபேறு

திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.

அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.

மூளைச்சாவடைந்து உயிரிழந்த மாணவிக்கு கிடைத்துள்ள பெறுபேறு - Lanka News - Tamilwin News

மேலும் இந்த மாணவி மூளைச்சாவு அடைந்தபோது இறுதி தருவாயில் இருவர் உயிரை காப்பாற்றியுள்ளார் என கூறலாம்.

அதாவது மாணவி இறந்தபின் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here