இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாலமுனையைச்சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (29/09/2923) பிற்பகல் 06:30 மணியளவில் காத்தான்குடி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் சந்தியில் நிகழுந்துள்ளது.
வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இரு இளைஞர்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி, குடும்பஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தரின் கால்களில் ஏற்பட்ட முறிவு காரணமாக காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தினை ஏற்படுத்திய இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காத்தான்குடி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் பொலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய இளைஞர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.