யாழில் இளம் ஆசிரியரை ஒரே நேரத்தில் ரீச்சரும், மாணவியும் காதலித்த சம்பவம்!! பெற்றோர்களே அவதானம்..நடப்பது என்ன?

பெற்றோர்களே… உங்களது இளவயது பெண் பிள்ளைகளை மிகவும் எச்சரிக்கையுடன் வளர்த்துக் கொள்ளுங்கள்… அவர்கள் செய்யும் சில செயற்பாடுகள் உங்களுக்கு ஒரு போதும் புரியாது… தெரியாது இருக்கலாம்… மிகவும் அமைதியாக நீங்கள் சொல்வதற்கு எல்லாம் கட்டுப்பட்டு நன்றாகப் படிக்கும் உங்கள் மகளின் மீது நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள்… ஆனால் அப்படி செய்யாதீர்கள்.. அந்தப் பிள்ளையையும் அவதானியுங்கள்…

பிள்ளையின் பாடசாலை புத்தகப் பைகளை அடிக்கடி பரிசோதியுங்கள்.. பிள்ளைக்கு கொடுக்கும் தொலைபேசியில் காணப்படும் வட்சப், வைபர் சற்றிங்குகளை பாருங்கள்… சிலவேளை உங்கள் பிள்ளை அவற்றை அழித்திருக்கலாம்.. அழிக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறும் ”அப்” கள் மூலம் அவற்றை மீளப் பெற்று வாசித்து பாருங்கள்..

இந்த உண்மைச் சம்பவத்தை வாசித்த பின்னர் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.. உங்கள் பிள்ளைகளின் நடத்தைகளை…

ஆசிரியர் மற்றும் பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கருதுவதால் இங்கு தரப்படும் தகவல்களில் சில தகவல்களை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை…….

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் முக்கிய பாடம் ஒன்றை கற்பிக்கும் ஆசிரியர் பிரகாஷ். (பெயர் மாற்றம்). திருமணமாகாத பட்டதாரி ஆசிரியர். அழகானவர். இவரது புகைப்படங்கள் சிலவற்றுடன், வைபர் சற்றிங்குகள் சிலவற்றின் ஸ்கிறீன்சொட்கள் அடங்கிய தகவல்கள், எமது இணையத்தள பேஸ்புக் ஒன்றிற்கு இனந்தெரியாத முகப்புத்தகத்திலிருந்து அனுப்பபட்டது.

பிரகாஷ் கற்பிக்கும் பாடசாலையின் பெயர், விபரங்களுடன் பிரகாஷ் அந்த பாடசாலையில் கற்கும், இந்த வருடம் ஓ.எல் எடுக்கும் மாணவியுடன் அந்தரங்க தொடர்பில் இருப்பதாக தெரிவித்து, அந்த மாணவியுடன் மேற்கொண்ட சற்றிங்குகள் அடங்கிய குற்றச்சாட்டாகவே அந்த தகவல்கள் வந்திருந்தன. அத்துடன் அந்த ஆசிரியரின் தொலைபேசி இலக்கமும், அதிபரின் தொலைபேசி இலக்கமும் எமக்கு அனுப்பபட்டிருந்தது.

அந்த சற்றிங் ஸ்கிறீன் சொட்களை அவதானித்த போது, குறித்த 16 வயது மாணவியின் காதல் வெறி அதில் தெரிந்தது. அந்த வெறிக்கு ஈடுகொடுக்குமளவுக்கு ஆசிரியர் சற்றிங் செய்யாதது போல் காணப்பட்டது அந்த சற்றிங். இதன் பின்னர் யாழில் உள்ள எம்முடன் தொடர்புபட்ட ஒரு ஊடகச் செயற்பாட்டாளருக்கு குறித்த தகவல்களை தெரிவித்திருந்தோம்.

அந்த ஊடகச் செயற்பாட்டாளர் அந்த ஆசிரியருக்கு தொடர்பேற்படுத்தியுள்ளார். அவர் மேற்கொண்ட புலனாய்வு தகவல்களின் பின்னர் ஆசிரியர் பிரகாஷ், மாணவி உட்பட்ட இரண்டு பெண்களால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள தகவல் வெளிவந்தது.

பாடசாலையில் முக்கிய பாடம் ஒன்றை கற்பிக்கும் பிரகாஷிற்கு, க.பொ.த சாதாரன தரத்தில் குறித்த ஒரு வகுப்பில் கற்கும் மாணவி காதல் வலை வீசிவந்துள்ளார். பிரகாஷிற்கு பிறந்தநாளின் போது வகுப்பில் மட்டுமல்லாது, தனிப்படவும் வட்சப்பில் வாழ்த்து தெரிவித்ததில் இருந்து மாணவியின் இந்த விளையாட்டு தொடர்ந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை பொருட்படுத்தாது திறமையான, நன்றாக கற்கக் கூடிய மாணவி, தன்னில் நம்பிக்கை வைத்து இவ்வாறு செய்கின்றார் என ஆசிரியர் பேசாது விட்டுள்ளார்.

ஆசிரியர் வகுப்பில் கற்பிக்கும் போது, குறித்த மாணவி ஆசிரியரை அங்கு வைத்தே தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்து இரவில் ஆசிரியருக்கு அனுப்பத் தொடங்கியுள்ளார். இதனை ஆசிரியர் மெசேஜ் மூலமாக எச்சரித்து இவ்வாறு செயற்படவேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனாலும் மாணவி தொடர்ச்சியாக சில இசகு பிசகான சற்றிங்குகளை மேற்கொண்டுள்ளாள். இதனால் தர்மசங்கடத்திற்குள்ளான ஆசிரியர் வகுப்பில் இது தொடர்பாக எச்சரித்தால் மற்றைய மாணவிகளும் அலேட் ஆகி இந்த தகவலை பரப்பி பின்னர் பல்வேறுபட்ட சிக்கல்கள் ஏற்பட்டுவிடும் என அஞ்சி பேசாது இருந்துள்ளார்.

அத்துடன் மாணவி இரவு வேளைகளில் அனுப்பும் சற்றிங் எல்லாவற்றுக்கும் எச்சரிக்கை செ்ய்தே பதிவு செய்து அந்த நம்பரையும் புளொக் செய்துவிட்டிருந்தார். பின்னரும் வேறு இலக்கத்திலிருந்து பிரகாஷ்க்கு அதே மாணவி சற்றிங் தொடங்கியுள்ளார். மாணவியின் சற்றிங் வேறு நம்பர்களில் இருந்து வரத் தொடங்கிய பின்னர் பிரகாஷ் அதற்கு எந்தவித பதிலோ ரியாக்சனோ காட்டாது இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாத்தி பட பாடல், மற்றும் சில வாத்தியர் மாணவி காதல் செய்யும் படங்களில் இருந்து பெறப்பட்ட பாடல்கள் எல்லாம் பிரகாஷ்க்கு மாணவியால் அனுப்பபட்டுள்ளது. கிஸ், மற்றும் கட்டிப்பிடிக்கும் எமோசன்களும் பிரகாஷ்க்கு அனுப்பட்டுள்ளன. வகுப்பில் மிகவும் அமைதியாக கெட்டிக்காரப் பிள்ளையாக இருக்கும் குறித்த மாணவி தன்னுடன் காட்டும் இவ்வாறான சேட்டைகளை பார்த்து பிரகாஷ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மாணவியின் புத்தகப் பை ஒரு தடவை பிரகாஷ் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. ஆனால் அதே நாள் பிரகாஷ் வகுப்பில் படிப்பிக்கும் போது எடுத்த போட்டோ அன்று இரவு பிரகாஷ்க்கு அனுப்பபட்டதை கண்டு பிரகாஷ் அதிர்ச்சியடைந்தார். மாணவி எங்கு தொலைபேசியை ஒளித்து வைத்திருந்து புகைப்படம் எடுக்கின்றாள் என தெரியாது தடுமாறியுள்ளார்.

ஆசிரியருக்கு இரவு 9 மணிக்குப் பின்னர் நேரடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டுள்ளார் மாணவி…. ஒரு மணித்தியால இடை வெளிக்குள் 25 தடவைகள் மாணவி பிரகாஷ்க்கு மிஸ்ட் கோல் கொடுத்துள்ளார். மாணவியின் காதல் வெறி கட்டுக்கடங்காமல் தொடர்ந்ததால் பதற்றமடைந்த பிரகாஷ் மாணவியின் செயற்பாடு தொடர்பாக தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்த அதே பாடசாலையில் கல்வி கற்கும் இன்னொரு ஆசிரியைக்கு கூறியுள்ளார்.

குறித்த ஆசிரியை பிரகாஷை விட 2 வயது மூத்தவராவார். அவருக்கும் திருமணம் ஆகவில்லை. பிரகாஷிற்கு பல்வேறுபட் உதவிகளையும் குறித்த ஆசிரியை செய்து கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறான நிலையிலேயே பிரகாஷ் குறித்த ஆசிரியையை மாணவியின் காதல் வெறியை அடக்குவதற்காக அணுகியுள்ளார்.குறித்த ஆசிரியை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பாடசாலையில் உள்ள மாணவிகளின் மனநல ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஆசிரியைக்கு இது தொடர்பாக குறித்த ஆசிரியை முறையிட்டதுடன் மாணவியை அந்த ஆசிரியையிடம் வரவழைத்து எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரு ஆசிரியைகளுக்கும் முன்பாக அந்த மாணவி தான் பிரகாஷ் சேரை உயிரு்ககு உயிராக காதலிப்பதாகவும் தனது கற்றல் நடவடிக்கை முடிவடைந்து 20 வயதுக்கு வந்த பின்னர் அவர் தன்னை திருமணம் முடிப்பதாக தனக்கு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதனால் இரு ஆசிரியைகளும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இதனையடுத்து பிரகாஷிடம் இரு ஆசிரியைகளும் விசாரணை செய்த போது அந்த மாணவி கூறியது பொய் என பிரகாஷ் கூறியுள்ளார். இருப்பினும் பிரகாஷிடம் நெருக்கமாயிருந்து ஆசிரியை அவரை நம்பாது தொடர்ச்சியாக மாணவி தொடர்பாக பிரகாஷிடம் கேள்வி கேட்டும் நெருக்கடிகளைக் கொடுத்துமுள்ளார்.

அத்துடன் மாணவியின் நடவடிக்கை தொடர்பில் அதிபர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு கொடுக்கமாறு பிரகாஷை வற்புறுத்திய போது பிரகாஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டால் மாணவி தன்மீது உள்ள வெறி காரணமாக பொய் கூறினாலும் அதை விசாரிப்பவர்கள் உண்மை என்று எண்ணி தன்னை சிறைக்குள் அடைக்க செய்துவிடுவார்கள் என பிரகாஷ் குறித்த ஆசிரியைக்கு கூறியுள்ளார்.

இதே வேளை குறித்த ஆசிரியையும் தன்னை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதை பிரகாஷ் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். நீ்ர் கலியாணம் கட்டாமல் திரிவதால்தான் உம்மை அவள் காதலிக்கிறாள்…. எனக்கு உம்மை பிடித்துள்ளது. உமக்கு ஓ.கே என்றால் நாம் சந்தோசமாக இருக்கலாம் என குறித்த ரீச்சர் நேரடியாகவே பிரகாஷை கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் எதுவும் பேசாது அந்த இடத்தை விட்டு அகன்று அதன் பின்னர் குறித்த ஆசிரியையுடன் கதைப்பது மற்றும் சந்திப்பது போன்ற தொடர்பை நிறுத்தியுள்ளார்.

இதன் பின்னரே குறித்த ஆசிரியையின் மற்றுமொரு காதல் தொல்லை பிரகாஷிற்கு ஏற்பட்டது. தொடர்ச்சியாக ஆசிரியை பிரகாஷிற்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தி அச்சுறுத்த தொடங்கியுள்ளார். அந்த மாணவிக்கு 16 வயது. அந்த மாணவி ஆசைப்பட்டாலும் உமக்குத்தான் சிக்கல். நீர் அவளுடன் ஏதோ ஒரு முறையில் ஆசையை தெரிவித்துள்ளீர். அதனால்தான் அவள் உம்மை சுற்றுகின்றாள்… இது வெளியில் தெரிந்தால் நீர் ஜெயிலுக்கு போகவேணும்… என்னை கலியாணம் கட்ட ஏன் பின்நிற்கின்றீர்… வயது வித்தியசமா… ? இவ்வாறு தொடர்ச்சியாக ஆசிரியையும் தொல்லை கொடுக்க தொடங்கிய போது குறித்த ஆசிரியைக்கு மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பிரகாஷ் ஏசியுள்ளார்.

இதனையடுத்து அந்த ஆசிரியை நம்பி பிரகாஷ் கொடுத்த மாணவியின் சற்றிங் அடங்கிய வட்சப் ஸ்கிறீன் சொட்கள் மற்றும் தொலைபேசியில் மிஸ்ட் கோல் செய்த ஸ்கிறீன் சொட்கள் போன்றவற்றை தான் அதிபரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப் போவதாக கடும் தொனியிலும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடனும் குறித்த ஆசிரியை ஏசிய பின்னர் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

அதே வேளை குறித்த மாணவியும் பிராகாஷ் உடன் மேலும் கடுமையான வெறியில் சற்றிங் மற்றும் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொண்டவாறு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பிரகாஷ் மாணவியுடன் உரையாடி மாணவி செய்யும் முட்டாள்தனமான காதல் தொடர்பான விளக்கங்களை கொடுத்து அதனை ஒலிப்பதிவும் செய்திருந்தார். மாணவியுடனான உரையாடலின் போது பிரகாஷ் எந்தவித துாண்டுதலும் மாணவிக்கு கொடுக்கவில்லை என்பதும் மாணவியே பிரகாஷை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது,

மாணவி மற்றும் ஆசிரியை ஆகியோருடன் பிரகாஷ் கதைத்து பதிவு செய்ய ஓடியோக்கள் எம்மிடம் உள்ளது.

பிரகாஷடன் முரன்பட்ட குறித்த ஆசிரியை மாணவியின் காதல் விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் முறையிட்டு விசாரணையும் நடைபெற்று பிரகாஷில் எந்தவித பிழையும் இல்லை என அறியப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மாணவியின் செயற்பாடு அதிபரால் நிதானமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு மாணவியின் குறித்த காதல் வெறி தொடர்பாக கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தனது மகளா இவ்வாறு செயற்பட்டால் என ஏங்கியுள்ளார்கள். பெற்றோர்கள் இருவரும் அரச ஊழியர்கள். அத்துடன் தந்தை அரச துறையில் முக்கிய பதவி ஒன்றில் உள்ளார்.

மாணவியின் காதல் வெறிக்கு ஓரளவு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டபின்னர் பிரகாஷில் வெறியாக இருந்த வயது கூடிய ஆசிரியைக்கு அந்த வெறி அடங்காது பழிதீர்க்கும் வெறியாக மாறியுள்ளது. அதன் பின்னரே குறித்த வட்சப் தகவல்கள் எமது ஊடக பேஸ்புக் பக்கத்திற்கு அடையாளம் தெரியாத முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதை அனுப்பியமை தொடர்பாக ஊடகச் செயற்பாட்டாளர் குறித்த ஆசிரியையை தொடர்பு கொண்டு கேட்ட போது ஆசிரியை பிரகாஷைப் பற்றி சில தகவல்களை கூறினார்.

பிரகாஷ் தன்னுடன் நெங்கி பழகியவர் என்றும் அவரது செயற்பாடுகள் காதலிப்பது போலவே இருந்ததாகவும் கூறினார். அத்துடன் அவர் மாணவியுடனும் அவ்வாறே கதைத்திருப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறினார். உதாரணமாக தான் அணிந்து வரும் சாறிகளில் இந்த சாறி எனக்கு பிடித்திருக்குது… இந்த சாறி எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுவாராம்.

அத்துடன் தனக்கு என்ன சாப்பாடு செய்து கொண்டு வந்தீர்கள்? உங்கட சாப்பாட்டையே தொடர்ச்சியாக சாப்பிடனும் போல இருக்குது என்றும் கூறுவாராம்…. ஏனைய ஆசிரியைகளுடன் இவ்வாறு கதைப்பதில்லை என்றும் தன்னுடனே இவ்வாறு நெருக்கமாக கதைத்து பழகியதாகவும் ஆனால் அந்த மாணவி காதலிக்க தொடங்கிய பின்னர் தன்னுடன் இவ்வாறு கதைக்காது விட்டதாகவும் குறித்த ஆசிரியை எமது ஊடக செயற்பாட்டாளருக்கு கூறியுள்ளார். அது உண்மையாகவும் இருக்கலாம்.

பிரகாஷ் பேசிப் பேசியே பெண்களை கவிழ்ப்பவராகவும் இருந்திருக்கலாம். ஆனால் பிரகாஷ் அந்த ஆசிரியையுடன் காதல் என்ற ரீதியில் கதைத்தற்கான எந்தவிதமான வார்த்தைப் பிரயோகங்களோ அல்லது எந்தவித ஆதாரங்களுமோ குறித்த ஆசிரியையிடம் இல்லை. அத்துடன் தன்னடன் தனிமையில் நெருக்கமாகவோ வேறு எந்தவிதமான காதலர்கள் செய்யும் செயற்பாடுகளிலோ பிரகாஷ் ஈடுபடவில்லை என்று குறித்த ஆசிரியையே கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒரு ஆசிரியர் நம்பி கொடுத்த விபரங்களை அதுவும் ஒரு மாணவியின் நலன்களில் பாதிப்பு ஏற்படுத்தும் தகவல்களை பலருக்கு அனுப்புவது தவறு என ஊடகச் செயற்பாட்டாளர் கூறிய போது குறித்த ஆசிரியை கடும் தொனியில் அவருடன் கதைத்ததுடன் தன்னைப் பற்றி இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டால் தனக்கு தொலைபேசி எடுத்து அச்சுறுத்தியதற்காக பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

ஆசிரியையுடன் தொலைபேசியில் குறித்த ஊடகச் செயற்பாட்டாளர் கதைத்த ஓடியோவும் எம்மிடம் உள்ளது. ஆகவே ஆசிரியையின் அச்சுறுத்தலுக்கு ஊடகச் செயற்பாட்டாளர் அஞ்சப்போவதில்லை. ஆசிரியையின் புகைப்படங்களை நாம் பெற்றுள்ளோம். இருப்பினும் ஆசிரியை இனிவரும் காலமும் பிரகாஷ் மீது தொடர்ச்சியாக காதல் வெறியுடன் செயற்பட்டால் அவரின் புகைப்படங்களுடன் தகவல்களை வெளியிடத் தயங்கமாட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here