யாழில் ஏ.எல் எடுத்த மாணவி யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உயிர்மாய்த்தார்!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை நேற்றைய தினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!