யாழில் ஐஸ் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளைஞன் பலியானார்

யாழ்ப்பாணம் மாநகரில் இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

26 வயது மதிக்கதக்க இளைஞனே யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திய தந்தையார் வெளிநாடு சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வந்த இளைஞன் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here