தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் இருந்து கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடமைக்கு சென்ற ஊழியர் ஒருவர் இன்று (15) காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டு வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேற்படி ஊழியர் பேருந்தில் இருந்து இறங்கி தனது அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட போதே வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி பனை ஆராய்ச்சி நிறுவன பணியாளரான 49 வயதான மா.சதீஸ்குமார் எனத் தெரிய வருகிறது.
மாரடைப்பு காரணமாக குறித்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது