யாழில் குற்றச்செயல்களில் தொடர்புடைய பயங்கர ரௌடிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிள்களை களவாடி , அவற்றுக்கு போலி இலக்க தகடுகளை பொருத்தி வன்முறை சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் குற்றச்செயல்களில் தொடர்புடைய பயங்கர ரௌடிகள் கைது! - Lanka News - Tamilwin News

அதேவேளை கடந்த வருடம் ஒக்டொபர் மாதம் காரைநகர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு வீட்டிற்கு தீ வைத்து ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் , நாவற்குழி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நவாலி , மானிப்பாய் , காரைநகர் மற்றும் கிளிநொச்சி விசுவமடு பகுதிகளை சேர்ந்த 24 வயது தொடக்கம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.