யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கதனமான தாக்குதல்..!

திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவனை அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளார்.

இதனால் சிறுவனின் கைகளில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் ஆசிரியர் தாக்கியமை, இந்தச்சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் விசனத்தை உண்டாக்கியுள்ளது.