யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் தரித்து நின்ற பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக தரித்து நின்ற போதே குறித்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீ விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.
எவ்வாறெனினும் இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்