யாழில் பிரபல ஆடையகம் ஒன்றின் முதலாளியின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அறை கட்டிலில் இளைஞர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 30 வயதான எஸ்.மிதுன்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் பவிப்பவர் என கூறப்படும் நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.
குறித்த இளைஞன் ஊசி மூலம் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.