யாழ் – வடமாராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் இளைஞன் ஒருவன் தனது தவறான முடிவினால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்திய நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (07.10.2023) மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 24 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.