யாழில் பொன்னுருக்கில் அடிதடி: மணமகளின் அந்தரங்க புகைப்படங்களையும், கடித்த மாங்காயையும் அவுஸ்ரேலிய மாப்பிளைக்கு சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பிய முன்னாள் காதலன்!

முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படத்தை அவரது திருமண பொன்னுருக்கு நாளில் சர்ப்ரைஸ் கிப்ட் என அனுப்ப்பட்டுள்ளது. இதனால் அவுஸ்ரேலிய மணமகன் வீட்டாரும், பெண் வீட்டாரும் மல்லுக்கட்டியதால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உரும்பிராயில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்தது.

உரும்பிராயிலுள்ள யுவதியொருவருக்கும், உரும்பிராயை பூர்வீகமாக கொண்டு, தற்போது அவுஸ்திரேலியாவிலுள்ள இளைஞருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர். இன்று பகல் பொன்னுருக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.

இன்று காலையில் மணமகன் வீட்டுக்கு இரண்டு இளைஞர்கள் சென்றிருந்தனர். சர்ப்ரைஸ் கிப்ட் வழங்கும் நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும், மணமகளின் நெருங்கிய நண்பர் ஒருவர் சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பியுள்ளதகவும் தெரிவித்துள்ளனர்.

பொன்னுருக்கும் நேரத்திற்கு சற்று முன்னதாக மணமகள் தரப்பினரின் முன்பாக பெட்யை திறக்குமாறும், அந்த நேரத்தில் பரிசை அனுப்பியவர் மகணமனை தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் குறிப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.

இன்று மாலை பொன்னுருக்கிற்காக மணமகள் வீட்டார் வந்த பின்னர், மணமகன் தரப்பினர் அந்த பெட்டியை திறந்துள்ளனர். அதற்குள், மணமகளின் அந்தரங்க புகைப்படம் ஒன்றும், பாதி உண்ணப்பட்ட மாம்பழமும், சில கற்களும் பொதி செய்யப்பட்டிருந்தன.

இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சிடைந்த மணமகன் தரப்பினர், பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றி மணமகனின் உறுவினர்கள் சிலர், மணமகள் தரப்பினரை தாக்கத் தொடங்கியுள்ளனர். பொன்னுருக்கிற்காக வந்தவர் இரு தரப்பையும் சமரசம் செய்ய முற்பட, அவரையும் தள்ளி விழுத்தியுள்ளனர். அவர் நிலத்தில் விழுநு்து, சுவாசிக்க சிரமமாக இருப்பதாக கூறியதையடுத்து, நிலைமை தணிந்தது. அவரை முச்சக்கர வண்ணியில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மணமகள் யாழ்ப்பாணத்திலுள்ள உயர்கல்வி நிறுவனமொன்றில் கற்றவர் என்றும், அந்த சமயத்தில் சிரேஸ்ட மாணவன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்தார் என்றும் தெரிய வந்தது. இதன்போது இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில் காதலன் அவரது அந்தரங்க புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த யுவதிக்கு வருட ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய மணமகனுடன் திருமணப் பேச்சு இடம்பெற்று நிச்சயமாகியுள்ளது. உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் யுவதி கலந்து கொண்டிருந்த போது, எடுத்த புகைப்படத்தை மணமகன் தரப்பினர் பார்த்து, யுவதியின் அழகில் மயங்கி திருமண பேச்சை ஆரம்பித்துள்ளனர்.

அவுஸ்ரேலிய மணமகனுடனான திருமண பேச்சையடுத்து, உள்ளூர் காதலனுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காதலன், யுவதியை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

கடந்த காதலர் தினத்திலன்று இருவரது புகைப்படமும் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொன்று தயாரித்து, யுவதியின் வீட்டு வாசலில் ஒட்டியிருந்தார். அத்துடன் அந்த சமயத்தில் யுவதி வெளியில் செல்லும்போது, மதுபோதையில் அவரை தொந்தரவு செய்துள்ளார்.

அத்துடன், காதலியுடன் எடுது்த புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து, யுவதியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து, இளைஞர் எச்சரிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர், இளைஞன் யுவதியை தொந்தரவு செய்யவில்லை.

இந்த நிலையில், இன்று யுவதியின் பொன்னுருக்கில மர்மநபர்கள் அனுப்பிய சர்ப்ரைஸ் கிப்டினால், அவரது திருமணம் குழம்பியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here