யாழில் ரிக்ரொக் யுவதியின் காதல் லீலை!! ஐரோப்பிய அங்கிளுடன் 32 லட்சம் வாங்கி சிலகாலம் சல்லாபம்!! வெளிநாட்டு இளைஞனுடன் கலியாணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞன் ஒருவரே மணமகன். இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து திருமணம் நடந்தது.

ரிக்ரொக்கில் ஆடல், பாடல் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த யுவதியின், தீவிர ரசிகரான இளைஞரே அவரை காதலித்து திருமணம் புரிந்துள்ளார்.

இந்த திருமணம் நடந்த இரண்டு வாரங்களில், பிறிதொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர், யுவதியின் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்துள்ளதுடன், யுவதி மீது யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் குடும்பஸ்தர் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

யாழ்ப்பாண ரிக்ரொக் அழகியின் வீடியோக்களில் மயங்கி, ரிக்ரொக் மூலம் யுவதியுடன் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவருக்குள்ளும் நெருக்கமான உறவு ஏற்பட்டது.

இருவரும் காதலித்ததாகவும், இந்த காலப்பகுதியில் யுவதிக்கு சுமார் 32 இலட்சம் ரூபா பணம் அனுப்பியதாகவும், யுவதி தன்னை நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும், அந்த பணத்தை மீள பெற்றுத்தர வேண்டுமென்றும் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.

யுவதிக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, யுவதி தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லாத நிலையில், யுவதியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர் கலாட்டாவிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, யுவதியின் வீட்டின் அருகிலிருந்த அலுவலகத்திலிருந்த அந்த பகுதி கிராமசேவகர் தலையிட்டு, அந்த நபரை சமரசப்படுத்தி, எதுவாக இருந்தாலும் பொலிஸ் நிலையம் சென்று முறையிடுமாறு அனுப்பி வைத்துள்ளார்.

யுவதியுடன் சுமார் 2 வருடங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் யுவதியுடன் இலங்கையின் வெவ்வேறு இடங்களில் 3 சந்தர்ப்பங்களில் ஒன்றாக தங்கியிருந்ததாகவும், தமக்குள்ளிருந்த அந்தரங்க உறவுக்கு புகைப்பட சான்றுகள் உள்ளதாகவும் கிராம சேவகரிடம் குறிப்பிட்டு, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களின் பிரதிகளை வீட்டில் வீசியெறிந்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், சட்டத்தரணியொருவர் மூலம் கடந்த வாரம் ரிக்ரொக யுவதிக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here