யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் ; 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றினுள் அத்துமீறி நுழைத்த வன்முறை கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் தீ வைத்துள்ளது.

வீட்டார் வெளியூர் சென்று இருந்த சமயம் , வீட்டில் மகன் மட்டுமே இரவு இருந்துள்ளார். அவ்வேளை வீட்டினுள் வன்முறை கும்பல் ஒன்று நுழைவதனை அவதானித்து அவர் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்தியதுடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து உடைத்து சேதமாக்கி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தீ வைப்பு சம்பவத்தினால் சுமார் 20 இலட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here