யாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்!

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) இரவு வெள்ளை நிற காரில் வந்த பிரபல ரௌடியான கனியென்பவர் இன்னும் 3 அடியாட்களுடன் காரில் வந்து, வாள் வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவத்தில் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இதன் போது காயமடைந்தார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அறிய  யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here