யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிகரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்காக இந்தியப் பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று மதியம் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர்.
Img 8189

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
Img 8183
அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்