யாழ் நகரின் முன்னணி பாடசாலையை குறிவைத்து இயங்கும் ஓரினச்சேர்க்கை வலையமைப்பு: மாணவனின் தற்கொலை முயற்சியால் வெளியாக திடுக்கிடும் தகவல்!

யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி பாடசாலையொன்றை இலக்கு வைத்து, ஓரினச்சேர்க்கை வலையமைப்பு இயங்கி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேபநபரை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவன், மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றிருந்தார். எனினும், தெய்வாதீனமாக கம்பிகளில் சிக்கி கீழே விழுந்ததால், மாணவனிற்கு உயிராபத்து ஏற்படவில்லை.

படுகாயமடைந்த மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மாணவர் கணினி விளையாட்டுக்களிற்கு அடிமையானவர், கணினி விளையாட்டு சவால்களை ஏற்று கீழே குதித்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆயினும், அந்த தகவல்கள் தவறானவை.

அந்த பாடசாலையை குறிவைத்து இயங்கிய ஓரினச்சேர்க்கையாளர் வலையமைப்பினால் மாணவன் பாதிக்கப்பட்டு, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

மாணவன் தரையில் குதிப்பதற்கு முன்னர், தனது உயிர் மாய்ப்பு முயற்சி பற்றி விபரமாக கடிதம் எழுதி வைத்துள்ளார். புத்தகப்பையில் 7 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அத்துடன் மற்றொரு கடிதம் எழுதி தனது காற்சட்டை பைக்குள் வைத்திருந்துள்ளார். தனது தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து எழுதப்பட்ட 7 பக்க கடிதம் புத்தகப் பையில் உள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

அந்த கடிதங்கள் பாடசாலை நிர்வாகத்தினால் கைப்பற்றப்பட்டது. உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைக்கவில்லை. பின்னர் தாமதமாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவனின் கடிதத்தின் மூலம், யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலையான அந்த பாடசாலையை குறிவைத்து சிலரால் இயக்கப்படும் ஓரினச்சேர்க்கை வலையமைப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவனின் கடிதத்தில் இரண்டு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் ஒரு நபர், பாடசாலைக்கு அண்மையாக இயங்கிய ஊடக நிறுவனமொன்றின் கட்டிடத்தில் பல மாதங்களின் முன்னர் வரை தங்கியிருந்துள்ளார். அவரே ஓரினச்சேர்க்கை வலையமைப்பின் பிரதான சூத்திரதாரியென குறிப்பிடப்படுகிறது. அவர் தனது தங்குமிடத்திற்கு மாணவர்களையும் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

14,15, 16 வயதான மாணவர்களை தனிமையாக அழைத்துச் சென்று, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, அதை வீடியோ படம் பிடித்து வைத்துள்ளார். மாணவர்கள் விழிப்படைந்து, அவரது பிடியிலிருந்து வெளியேற முயலும் காலகட்டத்தில் அந்த வீடியோக்களை காண்பித்து அவர்களை மிரட்டியுள்ளார்.

மேலும் அறிய  திருமலையில் 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

அந்த வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டி, மாணவர்களை வெளியிலுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களிற்கும் வழங்கி வந்தார் என்றும் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பிட்ட சந்தேகநபர் போதை மாத்திரைகளும் விற்பனை செய்பவரா என்றும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.