யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை

அண்மைக்காலமாக வவுனியா, கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் நிகழ்ந்த வைத்திய தவறுகளை போலவே காச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையை கழற்றும் அளவிற்கு வைத்திய தவறு ஒன்று நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

தாதியர் ஒருவர் நாளத்தில் ஏற்றவேண்டிய Antibiotics ஐ தவறான வழியில் ஏற்றியதால் இந்த பரிதாப நிலை சிறுமிக்கு ஏற்பட்டுள்ளது.

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை - Lanka News - Tamilwin News

கை வீங்கி சிறுமி வலியால் அழுது துடித்த போதும் அது காச்சலால் என தாதி பதிலளித்துள்ளார்.

குறிப்பாக அவ் குறித்த விடுதிக்கு பொறுப்பாக பல வைத்தியர்கள் அதாவது Consultant Paediatrician, SHO, HO, Head Nurse உட்பட தாதியர்கள் பலர் என கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்த போதும் குறைந்தபட்சம் விடுதியில் இரவு கடமையில் இருக்க வேண்டிய HO உட்பட எவரும் இப்பிரச்சினையை கவனிக்கவில்லை.

தவறான இடத்தில் Antibiotics ஐ ஏற்றியதால் பிள்ளையின் கையை பாதிப்படைய செய்தது. இதனை அடுத்தே அவசர அவசரமாக செயற்பட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் கையை கழற்றியுள்ளனர்.

பல பேரின் உயிரை காப்பாற்றும் வைத்தியர்கள் இப்பிள்ளையின் கையை கழற்றிய சம்பவம் வைத்திய துறையின் கறைபடிந்த விடயமாக மாறியுள்ளது.

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை

உயிரை காப்பாற்றும் உன்னத துறை சட்டங்களை தமக்கு சார்பாக மாற்றிக்கொண்டு வியாக்கியானம் கூறுவதுடன் கடந்து போகின்றனர்.

இந்த பொறுப்பற்ற நிலைக்கு சிறுமியின் பெற்றோரும் இயல்பாக கடந்து போகாமல் இப்படியானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி செயற்படுவதே இத்தகைய தவறுகள் ஏற்படுவதை தடுக்கும்.

தங்கள் தவறை மறைக்க ஆயிரம் செய்வார்கள். அதற்காக சட்டத்தின் முன் நிறுத்துவதை தவிர்க்க கூடாது. தவறு இழைத்தவர்களுக்கு படிப்பினையாக கூட இருக்கும்.

இவ்வாறான தவறு இழைப்போருக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என சமூக நலன் விரும்பிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை - Lanka News - Tamilwin News

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

“கனிலா பொருத்தப்பட்டபோது அல்லது மருந்து செலுத்தப்பட்டபோது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்காலம் என்று சந்தேகிக்கப்படுகின்றது” என்று பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி  தெரிவித்தார்.

“கையின் கீழ்ப் பகுதிக்கு இரத்தம் தடைப்பட்டு, கை செயழிழந்துள்ளது. அதனால் மணிக்கட்டின் கீழ் கையை அகற்ற வேண்டி ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவதானம் செலுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் அலுவலகத் தரப்புக்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here