யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை??

தாதியர்களாக பணிபுரியும் காலங்களில் தமக்கு ஏற்படும் இன்னல்களை காரசாரமாக முகநூலில் எழுதிய தாதிய உத்தியோகஸ்தர் ஒருவரிற்கு எதிராக யாழ் போதனாவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ் போதனாவில் கடந்த மாதம் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமைக்கு தாதியர்களே காரணம் என சமூக வலைத்தளங்களில் மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகியதிலிருந்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.

இது தொடர்பாக பணிப்பாளர் அவர்களிடம் எழுத்து  மூலம் பல தடவைகள் தாதியர் சங்கமானது அறிவித்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் தாதியர்களே தவறிற்கு காரணம் என முடிவுக்கு வரும்வகையில் தாதியர்கள் ஸ்மாட் போன் பாவிக்க தடை என அறிவித்தல் விட்டதோடு ஒருவர் தனது உண்மையான ஆதங்கத்தை முகநூலில் எழுதியதற்காக பழிவாங்கும் செயலாக இதை தாம் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தாதியாரின் முகநூல் பதிவினை ஏராளமான தாதியர்கள் பகிர்ந்துள்ளதோடு பின்னூட்டங்களும் இட்டுள்ளனர். இது பொய்யான தகவல் என எந்த தாதியும் பின்னுட்டம் இடவில்லை.

யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை??

அந்த பதிவு இதோ,

தம்பியரே தங்கையரே Nursing வேலைக்கு வர முன் ஒரு முறை யோசியுங்கோ வாசியுங்கோ😎😎😎

01. மூன்று வருட படிப்பு தம்பி முக்கித்தான் படித்தாலும் வேலை இல்லா இந்த படிப்பு வேறு வேலை பாரப்பா

முதல் வருட படிப்பு: கட்டில், Locker இல் தூசு தட்ட வேணுமப்பா
நன்றாக தட்ட வேண்டும் அதை பார்க்க Nursing Tutor வருவாரப்பா
தட்டியது பிழை என்றால் உன் கதை சரியப்பா
Punishment duty செய்யணும் தம்பி
அப்பவே தொடங்கிடும் Nursing வேலையின் கோத்திரம் தம்பி
நோயாளியை குளிப்பாட்ட வேணுமப்பா
புண்ணியம் என்று சொல்லுவார் நம்பிவிடாதேயப்பா

இரண்டாம்/ மூன்றாம் வருட படிப்பு:
ஊசி போடணும் Cannula போடணும் இரத்தம் எடுக்கணும்
முக்கி முக்கி முறையாக படித்தாலும் அரைகுறை படிப்பு என்பர்
அடிமுட்டாள் ஆக்கிவிடுவர்

02. தாதியாக வந்த உடனே தலையிடி தொடங்கிவிடும்
ஆள் இல்லை என்று அழைப்பர் Dutyக்கு அப்பவே தொடங்கும் சனியன்னப்பா

03.ward Rounds இல் இரத்த Reports இல்லை என்றால் இரைவார்கள் வைத்திய நிபுணர்கள் (ஒரு சிலர்) call பண்ணி கேட்டால் sample run பண்ணுது என்பார்கள்
விடுதியில் சம்மந்தம் இல்லாமல் வாங்கிய பேச்சாலே நம்ம Blood Pressure உம் Run பண்ணி விட்டுடூம்மப்பா

04. இங்கே கக்கூசு மணத்தாலும் Nurse தான்னப்பா Bystanders கட்டிலில் அமர்ந்தாலும் Nurse தான்னப்பா
கவனிச்சு பாரப்பா நம்ம வேலையின் கதியையப்பா

05.Ortho rounds ஒன்று பின் Neuro Rounds ஒன்று பின் OMF rounds ஒன்று General Surgery rounds ஒன்று பின் Uro rounds பின் சிலவேளை ENT rounds ஒன்று இப்படியே ஓடியோடி என்ர காச்சட்டை பீத்தலப்பா

06.பிரச்சனை வந்தாலே எனக்கேது வம்பு என்றென்னி பின்னுக்கு நிற்போர் Nurse தான்னப்பா
பெரியவர்களோடு (Consultant )வாய் காட்டி விட்டியோ வேற ward மாறனுமப்பா
இப்படியே போகுதப்பா எங்கள் கேவல வேலையப்பா

07. எவ்வளவுதான் நீ முக்கி முக்கி முறிஞ்சாலும் கேவலமா கதைப்பதற்கு
நன்றி கெட்ட நாலு மூதேவிகள் இருக்குதப்பா சமூகத்திலே

08.நான் கல்யாணம் பண்ணினதும் Nurse தான்னப்பா
கடமையிலே நின்று வீட்டுக்கு என்ன சாமான் வாங்க வேணுமென்று கதைப்பதற்கு வழியில்லை,
வீட்டிலே நிற்கின்ற இரண்டு பிள்ளைகளின் சுகநலம் விசாரிக்க வழியில்லை
(தொடர் 18மணி நேர Dutyயின் போது)
ஏனென்றால் பொக்கற்றில் கைவிட்டு Phone ஐ தூக்க கை பதறுதப்பா பணிப்பாளர் வந்து phone ஐ பறிப்பரோ என்றப்பா

09. அரியண்டம் தாங்காமல் அரைவாசி Nurseகள் வெளிநாடு போகுதப்பா அவமானம் தாங்காமல் அரைவாசி Nurseகள் Pension இலேபோகபோதப்பா

10.இதெல்லாம் யோசிச்சு வேலைக்கு வராமல் நின்று என்ர லீவு எல்லாம் ஏழு மாதத்தில் முடிஞ்சுதப்பா

சொல்வதெல்லாம் சொல்லி போட்டேன் வேணாமப்பா இந்த வேலை தயவு செய்து வேற வேலை பாரப்பா🙏🙏🙏

இப்படிக்கு
……………😢😢😢

இதேவேளை, தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் உண்மையை சொல்ல இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் கூட இல்லையா எனவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

சம்பவம் தொடர்பாக யாழ் போதனாவில் பணிப்பாளரிற்கு அனுப்பிய கடிதங்கள் இவை,

இதற்கான பதில் எதனையும் அவர் வழங்கவில்லை என்றும் தாதியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு மீண்டும் மீண்டும் நோயாளிகள் பாதிப்படையும் சூழ்நிலையை உருவாக்கி கொள்ள முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? - Lanka News - Tamilwin News யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? - Lanka News - Tamilwin News யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? - Lanka News - Tamilwin News யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? - Lanka News - Tamilwin News யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? - Lanka News - Tamilwin News யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை?? - Lanka News - Tamilwin News

யாழ் போதனாவில் யாழ் போதனாவில் யாழ் போதனாவில் யாழ் போதனாவில் யாழ் போதனாவில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here