யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க பணிப்பாளர் தடை விதித்துள்ளார் .
கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தாதியர்களின் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் ,குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் (para medicals staff ) தொடர்பில் அவர் கவனம் செலுத்தவில்லை எனவும் சாதாரண வாகன பாஸ் விடயத்தில் கூட வைத்தியர்களிற்கு வைத்தியர் எனவும் தாதிகள் ஏனையவர்களை staff எனவும் வேறுபாடு காட்டி வருவதாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.