யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைய முயன்ற இருவர் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு வளாகத்துக்குள் உள்நுழைந்தனர்.

விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட வருபவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்படும் நிலைமை தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here