யா/அ.த.க பாடசாலையிலும் கால்கோள் விழா..!{படங்கள்}

யா/ கேவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்றைய தினம்  (22) பாடசாலை அதிபர் தலைமையில் கால் கோள் விழா சிறப்பாக இடம்பெற்றது.

முதலாம் வருடத்தில் இணைந்து கொண்ட மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்

குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தேசத்தின் குரல் வலையமைப்பினரால் கற்றல் உபகரணங்களும்  வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Fb Img 1708602458389 Fb Img 1708602437543 Fb Img 1708602456022 Fb Img 1708602448758