புசல்லாவ, சோகம தோட்டத்தில் உள்ள தேயிலை மலையிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
புசல்லாவ, எல்பொட பகுதியைச் சேர்ந்த சதாசிவம் நிரஞ்சளா என்ற 25 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சடலத்தை கண்ட பிறகு அது தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் இது தொடர்பில் புசல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். மேலும் கம்பளை சொகோ பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அத்தோடு கம்பளை உதவி நீதவான் நந்தினி காஞ்சிலதா வின் விசாரனையின் பின் மேலதிக பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டுசென்றனர்.
https://hiru7.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/