கம்பகா – கந்தானை பகுதியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும், அவரது மனைவியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நேற்றைய தினம் (15-10-2023) வெலிசர நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபர்களை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தானை பகுதியில் பெண்ணொருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்படுவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான பெண் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தற்போது சிகிச்சைகளுக்காக கந்தானை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் – அதிர்ச்சி வீடியோ