யுவதி ஒருவரின் மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.

யுவதி ஒருவரின் கையிலிருந்த சுமார் 40000/= பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைப் பறித்து ஓடியவரை பிடித்து அடித்த நுவரெலியா பிரதேசவாசிகள் அவரை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு பின்புறமுள்ள வீதியில் கையடக்கத் தொலைபேசியுடன் நடந்து சென்ற யுவதியின் பின்னால் வந்த நபர் கையடக்கத் தொலைபேசியை பறித்துக் கொண்டு ஓடிய போது யுவதி கத்தும் சத்தத்தை கேட்டு வந்த பொது மக்கள் ஓடியவரை பிடித்து அடித்த நுவரெலிய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

யுவதி ஒருவரின் மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!