ரணிலுக்கு விக்னேஸ்வரன் ஆதரவு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போதைய நிலையில் நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு தமது தொகுதிக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறுவொரு தலைவர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சி.வி.இன் இந்த நிலைப்பாடு பரவலாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.