ரயிலில் சிசு மீட்பு: யுவதியை விசாரணை செய்த அதிகாரிக்கு சிக்கல்

மீனகயா இரவு நேர ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற பெண் கைதுசெய்யப்பட்ட வழக்கை பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கையாண்ட விதம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் (ஐ.ஜி.பி) பணிப்புரைக்கு அமைய விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டாரவளை பிரதான பொலிஸ் பரிசோதகர் வழக்கை கையாண்ட விதம் குறித்து பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை (12) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரான குறித்த பெண்ணை கைது செய்த போதும், சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய போதும், விசாரணையின் விபரங்களை கருத்திற் கொள்ளாமலும் சந்தேக நபரான பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் பொலிஸ்மா அதிபரினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்றாத காரணத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!