ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

ரிக்-ரொக் மோகத்தால் தோணியில் சென்ற இரு இளைஞர்கள் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று மட்டக்களப்பு நகர சபைக்கு உட்பட்ட நாலவடியில் உள்ள வாவியொன்றில் நடந்துள்ளது.

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதான த.கிருசாந்த் மற்றும் 18 வயதான பி.பிருஜனன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஏனைய இருவரும் வாவிக்குள் தோணியில் சென்று ரிக்-ரொக் செய்துவிட்டுக் கரைக்குக் திரும்பியபோதே தோணி கவிழ்ந்துள்ளது.

நால்வரும் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் அந்தப் பகுதி மக்களால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தப் பகுதி மீனவர்களும், பொலிஸாரும் இணைந்து மீட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் பழையமாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியிலுள்ள ஆற்றில் பயணித்து அதனை டிக் டொக் காணொளியாக செய்வதற்காக தோணியை எடுத்துக்கொண்டு அதில் 6 பேரும் பயணித்துள்ளனர்.

தோணியில் ஒருபகுதி உடைந்து தோணி ஆற்றில் மூழ்கியே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தோணி ஆற்றில் மூழ்கிய நிலையில் 6 பேரும் கரைக்கு வர முயற்சித்துள்ளனர். இவர்களில் 5 பேர் கரையை வந்தடைந்ததாகவும் பிரிஜன் என்பவர் ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற கிரி என்னும் இளைஞனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்திலிருந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பிரிஜன், கிரியின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரிக்-ரொக்கில் பிரபல்யம் அடைவதற்காக ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!
ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!
ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!
உயிரிழந்த இரு இளைஞர்கள்!
ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!
உயிரிழந்த இரு இளைஞர்கள்!

ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!
ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

tamilwin news tamil news online tamil win news jaffna news today jaffna today jvpnews jvp news sri lanka tamil news tamilmirror virakesari colombo tamil news newsfirst lanka today lanka news lankasri news Hiru News Tamil Sooriyan Fm News IBC Tamil Sri Lanka Tamil News News1st JVP Sri Lanka IBC News Latest News Sri Lanka News Breaking News dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee news vavuniya news batticaloa news gossips tamilcnn Aluth Jobs Find latest vacancies in Sri Lanka lanka sri news batti news CINEMA NEWS TAMIL job news Local News mannar tamil news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here