லிந்துலை சம்பவம்!! தாயின் சடலத்தை தொடர்ந்து குழந்தையின் சடலமும் மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டம் பகுதியில் உள்ள பாரிய குளத்தில் இருந்து தாய் மாற்றும் ஒருவயது குழந்தை ஆகியோரின் சடலங்கள் புதன்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் தான் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளதாக மூன்று பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றையும் அப்பெண் எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதம், திருமண சான்றிதழ், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளத்தின் அருகில் வைத்து விட்டு குளத்தில் பாய்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

26வயதுடைய தாய் தயானி மற்றும் ஒரு வயது மகள் பிரதிக்ஸா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகள் முன்னெடுக்கப்பட்ட தோடு நுவரெலியா மாவட்ட நீதிவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்று சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு!

 

மேலும் அறிய  சற்று முன் கரையொதுங்கிய ஒரு மாணவனின் சடலம்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here