அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் லொறிச் சாரதியை கைது செய்துள்ளதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் தம்பிலுவில் பிரதான வீதி வீ.சி. வீதிக்கு அருகில் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார்சைக்கிளில் சென்ற
இருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறிச் சாரதியை கைது செய்ததுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவில் நிருபர்