வவுனியா பெண் ஆடைகள் அற்ற நிலையில் சடலமாக மீட்பு!

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 34 வயதான மலர்விழி எனும் இளம் குடும்ப பெண் ஜேர்மனி கம்பேக் எனும் இடத்தில் அவரது வீட்டில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

12 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் வசித்து வந்த முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து ஜேர்மன் சென்ற மலர்விழி ஓரிரு வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் அவர் கம்பேக் எனும் இடத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்பகுதியில் வசித்துவரும் தென்னிந்திய குடும்பம் ஒன்றுடன் வீட்டின் மேற் பகுதியில் தனிமையில் மலர்விழி வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

மலர்விழியின் உறவுக்காரர் ஜேர்மனியில் வசித்து வந்ததாகவும் அடிக்கடி அவர் மலர்விழியை சந்திக்க வருவதாகவும் அவர் வந்து சென்ற பின்னரே மலர்விழியின் நடமாட்டம் வீட்டில் காணப்படவில்லை எனவும் இந்திய குடும்பத்தவர்கள் பொலிசாருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மலர்விழி ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் தனது தனிப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா பெண் ஆடைகள் அற்ற நிலையில் சடலமாக மீட்பு! - Lanka News - Tamilwin News வவுனியா பெண் ஆடைகள் அற்ற நிலையில் சடலமாக மீட்பு! - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  இலங்கையின் முதலாவது மிதக்கும் விடுதி..! {படங்கள்}