வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டு 18 வயது யுவதி கூட்டு வல்லுறவு!

கால்நடையாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 18 வயதான யுவதியை, தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய 2 காமுகர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

வாதுவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் யுவதி இரவு நேரம் கடையிலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. நடந்து சென்று கொண்டிருந்த யுவதியை வீடு வரை தமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக சிறிய லொறி ஒன்றில் வந்தவர்கள் தெரிவித்தனர். யுவதி லொறியில் ஏறியுள்ளார்.

பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறியதாகவும், வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள ஆட்களற்ற தோட்டத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கு லொறியின் முன்பகுதியில் வைத்து யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். யுவதி எதிர்ப்பு தெரிவித்த போது, அவரது கழுத்தில் குத்தி வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்

ஆபத்தான நிலையில் இருந்த யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பார்த்தால் துஷ்பிரயோகம் செய்த நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டதாகவும், அவரது தாயார் சிறையில் இருப்பதாகவும், அவரது மூன்றாவது கணவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.