கடந்த ஜுன் மாதம் 11 ம் திகதி தம்புள்ளை கெக்கிராவா பிரதான வீதியின் சிறப்பன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் , காயங்களுக்கு உள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிபர் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், கல்விளான் குளம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான இராசேந்திரன் நிக்சன் வயது 48 என பொலிசார் தெரிவித்தனர்.
சுற்றுலா சென்று விட்டு மல்லாவி திரும்பிக் கொண்டிருந்த வாகனம், வீதி ஓரம் நின்றிருந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று இருந்தது. இந்த சம்பவத்தில் அதிபர் தலைமையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகள் சிறப்பன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.