வீடியோ போட்டதால் தாக்கியதாக அழுது புலம்பிய தமிழ் யூரியூப்பர் நையப்புடைக்கப்படும் காட்சிகள் வெளியானது

வீடியோ போட்டதால் தன்னை தாக்கியதாக முகமெல்லாம் இரத்த கறையோடு பற்கள் எல்லாம் உடைந்த நிலையில் அழுது புலம்பிய தமிழ் யூரியூப்பர் ஒருவர் எதற்காக நையப்புடைக்கப்பட்டார் என்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

வீடொன்றிற்குள் இளைஞர்களால் இவர் சுற்றி வளைக்கப்பட்டு நையப்புடைக்கபட்டுள்ளார். இதன் போது அவரை அடிக்க விடாமல் பெண் ஒருவர் தடுக்கின்றார்.

இருந்தும் பலரால் நையப்புடைக்கப்பட்ட அவர் தனது யூரியூப்பில் தான் தாக்கப்பட்ட பின்னர் தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் கதைக்கும் காட்சிகள் வெளியாகி பலர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த வீடியோவில் தான் வீடியோ செய்து பேஸ்புக் , யூரியூப்பில் பதிவிடுவதாலேயே தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர் தாக்கப்பட்டமைக்கு இதுதான் காரணம் என முகநூல் வாசி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த பொம்புளைக்கு பின்னாடி ஒழிந்து கொண்டு நிற்கின்றார் அவர் தான் பிரபல Youtuber We are raskol.

இவர் ஒரு பெண் பித்தர் இவருக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும் இவர் திருந்தவில்லை ஒரு பெண்ணை தேடிச் சென்று வீட்டின் அறையில் கட்டிலுக்கு கீழ் பதுங்கியிருந்து கையும் களவுமாக மாட்டிக் கொண்ட போது இளைஞர்களால் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது அங்கிருந்த கட்டையை எடுத்து ஒருவர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிக்க முயன்ற போது அங்கிருந்தவர்களால் நைய புடைக்கப்பட்டார்.

இது தான் இவர் தாக்கப்பட்டதற்கான காரணம்.

இவர் வளர்ச்சி மீது பொறாமையாம் அது தான் வீதியால் போனவருக்கு அடித்தார்களாம் அவர் சொன்ன காரணம்.

இந்த கழிசடைக்கு நம்மில் சிலர் ஆதரவு.

இன்று சமூக சேவையாளர் என்ற பெயரில் ஒரு சிலர் இவ்வாறான கேவலமான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறன்றனர் என  அவர் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here