அரச வைத்தியசாலையொன்றில் கடமையாற்றும் பொது சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பொது சுகாதார ஆய்வு கூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நிட்டம்புவ தலைமையக பொலிஸாரால் நேற்று (6) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐம்பத்தைந்து வயதுடையவர்.
விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையிலும், முப்பது வயதான ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.