ஹெரோயின், வாள்களுடன் நடமாடியவர் கைது – நெல்லியடியில் சம்பவம்

நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.

ஹெரோயின், வாள்களுடன் நடமாடியவர் கைது – நெல்லியடியில் சம்பவம் - Lanka News - Tamilwin News

மேலும் அறிய  கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here