HomeAccident News15 வயதான பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் பலி, மேலும்...

15 வயதான பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் பலி, மேலும் இருவர் காயம்…

பாடசாலை மாணவர்களுடன் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்

கல்கமுவ – அதரகல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments